ஏன் நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், படிகாரம் கோர்த்து கட்டினார்கள்!
ஏன் நம் முன்னோர்கள் வீட்டு வாசலில் எலுமிச்சை, மிளகாய், படிகாரம் கோர்த்து கட்டினார்கள்!
பல வீடுகளில், வாசலில், கருப்பு கயிறு ஒன்றில் படிகாரம், எலுமிச்சம் பழம், மிளகாய், மிளகு, ஈச்சமுள், மஞ்சள் மற்றும் தேங்காய் உள்ளிட்ட பொருட்களை கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருப்பர். இது, வெறும் கண் திருஷ்டிக்காக தொங்கும் கயிறு அல்ல நம் உயிரை காக்கும் முதலுதவி பெட்டி.
மின்சாரம் இல்லாத அக்காலத்தில், இரவில் வெளியில் சென்று வரும்போது, ஏதேனும் விஷ பூச்சிகளோ, பாம்போ கடித்து விட்டால், முதல் உதவி முக்கியம் அல்லவா... அதற்காக தான் இந்த பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை, வீட்டு வாசலில் தொங்க விட்டு இருப்பர், நம் முன்னோர் கைகளிலோ அல்லது காலிலோ விஷ ஜந்துகளால் கடிபட்டால், விஷம் மேலும் பரவாமல் தடுக்க, கயிற்றால் கட்டி, கடி வாயில் படிகாரத்தை தேய்த்தால் எரிச்சல் குறையும்.
விஷக் கடியாக இருந்தால், மிளகாய் அல்லது மிளகை சுவைக்கும் போது, காரம் இல்லையென்றால் கடுமையான விஷக்கடி என்றும், காரம் இருந்தால் பூச்சிக்கடி என்றும் தெரிந்து கொள்வர்.
விஷப் பூச்சி கடித்ததால் ஏற்படும் களைப்பை போக்க, எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொடுப்பர்.
எந்த மாதிரியான விஷக்கடி என்பதை அறிய, ஈச்ச முள்ளால் அந்த இடத்தை கீறி பார்த்து தெரிந்து கொள்வர்.
எட்டுகால் பூச்சி கடித்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து, தேங்காய் சில்லை தின்றால், உடனடி விஷ முறிவு ஏற்படும் சாதாரண ரத்த கட்டி வீக்கமாக இருந்தால், மஞ்சள் தடவி விடுவர்.
அறிவியல் உண்மை :
எலுமிச்சை மற்றும் மிளகாயில் வைட்டமின் சி நிறைய இருக்கிறது. இதில் கயிறு கோர்த்து கட்டும் போது. காட்டன் கயிறு அந்த ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக் கொள்ளும். மெல்ல, மெல்ல அது ஆவியாக வெளிப்படும்.
இவ்வாறு வெளிப்படும் காற்றை சுவாசிப்பதால் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.
எலுமிச்சை, மிளகாயில் இருந்து வெளிப்படும் வாசத்தை தாண்டி, இது நச்சுக்கள் வீட்டுக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. இதனால் நோய் தொற்றுகள் அண்டாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.
unknown facts ! unknown world !
Comments
Post a Comment