பாரம்பரிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்
நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்:
பாண்டியாட்டம்:
வேறு பெயர்கள்:
நொண்டி, சில்லு பாண்டி, சில்லு கோடு, எட்டுக்கட்டி விளையாடுதல்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4cZ6MYFPM6yp4_UVGfyBVqFRm_2VIvCTN2BYUWkvqkTAu-borR1qXzsBmyVgMiPZD0S5cn6CoOc6w1sLRWWfW1Uv401LgjDy3N718WSRWUz3u8JDDrvjKzucvu_362tKkZzOze_nrcSyO/s640/images+%25289%2529.jpeg)
சில்லு விளையாட்டு..!
🏌குழந்தைகள் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக பார்க்காமல், அவர்களின் உடலுக்கு நன்மை தருகிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.எத்தனை பேர் விளையாடலாம்?
🏌பல பேர்
எப்படி விளையாடுவது?
🏌முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு மைதானத்தில் குச்சியால் எட்டு கட்டங்களை போட்டுக்கொள்ள வேண்டும்.🏌பின்பு இந்த கட்டத்திலிருந்து சுமார் 10 அடி தொலைவில் உத்திக் கோடுகளை வரைந்துக் கொள்ள வேண்டும்.
சில்லு கல்:
🏌பிறகு முதலாவதாக விளையாடும் நபர் உத்திக்கோட்டிலிருந்து முதலாவது கட்டத்தில் சில்லை எறிய வேண்டும். இவ்வாறு எறியும்பொழுது சில்லு கோட்டில் படாமல் இருக்க வேண்டும். அவ்வாறு பட்டுவிட்டால் அடுத்த நபர் விளையாட்டை தொடங்க வேண்டும்.🏌சில்லை எறிந்த பின்பு முதல் போட்டியாளர் உத்திக்கோட்டிலிருந்து முதலாவது இருக்கும் கட்டத்திற்கு நொண்டி அடித்து வர வேண்டும்.
🏌பின்பு முதலாவது கட்டத்தில் இருக்கும் சில்லை மிதித்துவிட்டு, நொண்டியடித்தவாறு சில்லை கட்டத்திற்கு வெளியே தள்ளி, ஒரே தாவில் நொண்டிக்காலால் சில்லை மிதித்தால் அவர் பழம் பெற்று விடுவார்.
🏌ஆனால், இவ்வாறு விளையாடும்போது ஏதாவது தவறு நேர்ந்தால், முதல் போட்டியாளர் வெளியேற்றப்பட்டு, அடுத்ததாக இருக்கும் போட்டியாளர் ஆட்டத்தை தொடங்கலாம். பிறகு முதல் போட்டியாளருக்கு எந்த ஆட்டத்தில் பிழை நேர்ந்ததோ அவருடைய அடுத்த ஆட்டமுறை வரும்போது அதிலிருந்து விளையாட்டை தொடங்கலாம்.
🏌அதேபோல் முதல் போட்டியாளர் பழம் எடுத்தால் இதேபோல் இரண்டாம் கட்டம், மூன்றாம் வட்டம் என்ற வரிசை முறையில் விளையாட்டை தொடர வேண்டும். இவ்வாறு ஆடி முடித்தபின் கடைசியாக மச்சு ஆட்டம் ஆட வேண்டும்.
🏌உத்திக்கோட்டிலிருந்து நொண்டி அடித்து வந்து முதலாவது கட்டத்தில் தன் இரு கால்களையும் ஊன்றி நின்றுக்கொள்ள வேண்டும்.
🏌அதன்பின் ஆடிய சில்லை தலையில் வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு சரியா, தவறா என்று கேட்டு கட்டத்தை தாண்டிச் செல்ல வேண்டும்.
🏌இவ்வாறு சென்றபின் சில்லை தரையில் போட்டு கண்ணை திறந்து அவற்றை மிதிக்க வேண்டும். மிதிக்கும் இந்த இடத்தை மலை என்று கூறவும்.
🏌அவ்வாறு சில்லை மிதித்துவிட்டால் கட்டத்தின் ஓரத்தில் ஒரு பகுதியில் கட்டம் போட்டுக் கொள்ள வேண்டும். அடுத்து வரும் ஆட்டத்தில் நொண்டி அடித்து செல்லும்போது, தன் மச்சில் இரு கால்களையும் ஊன்றிக் கொள்ளலாம். அதிகமாக யாரு மச்சு கட்டுகிறார்களோ அவரே வெற்றியாளர் ஆவார்.
அறிவியல் காரணம்:
🏌 இதனால் குழந்தைகளின் கெண்டைக்கால்,கணுக்கால் மற்றும் பாதங்கள் வலுபெறுகிறது.
பல்லாங்குழி விளையாட்டு
பிற விளையாட்டுகளின் லிங்குகள்:
![]() |
பல்லாங்குழி |
பல்லாங்குழி விளையாட்டு
Comments
Post a Comment