பல்லாங்குழி விளையாட்டும் அதன் அறிவியல் உண்மைகளும்
நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்: PART-2
பல்லாங்குழி:
கிராமங்களில் நாம் மறந்தவை !!
🤑 நம்மிடம் இன்னும் கொஞ்சம் உயிருடன் இருக்கும் விளையாட்டுக்களுள் ஒன்றான பல்லாங்குழி ஆட்டத்தைப் பற்றி இங்கு காண்போம்.
🤑 பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தாலான ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும்.
தேவையானவை :
🤑 கற்கள், புளியங்கொட்டை
ஆடுபவர்களின் எண்ணிக்கை :
🤑 இரண்டு பேர்
எப்படி விளையாடுவது?
🤑 பல்லாங்குழி சட்டத்தில் ஏழு குழிகள் இருக்கும். அவற்றுள் புளியங்கொட்டைகளை (அ) கற்களை 5, 5 ஆகப் போட்டு வைக்க வேண்டும்.
🤑 ஒரு குழியில் இருப்பதை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும். முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து அப்படியே போட்டு வர வேண்டும். முடிந்தவுடன் ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும்.
🤑 ஒரு குழியில் நான்கு கொட்டைகள் இருந்தால் அதையும் 'பசு" எனச் சொல்லி தனதாக்க வேண்டும். ஆட்ட இறுதியில் ஒரு பெண் தோற்கும் போது (ஒரு குழிக்குரிய குறைந்த பட்ச சோழிகள் 5 இல்லாமல் இருந்தால்) குழிக்கு ஒவ்வொரு சோழி இட்டு ஆட்டம் தொடங்குகிறது. இதற்கு கஞ்சி காய்ச்சுதல் என்று பெயர்.
🤑 இவ்விளையாட்டை விளையாடுபவர்கள் அனைத்து சோழிகளையும் பெறவும் முடியும் அல்லது இழக்கவும் முடியும். இவ்விளையாட்டில் இருவர் மட்டுமே விளையாடலாம்.
Comments
Post a Comment