கோவில் பிரசாதமாக வழங்கப்படும் தங்கம் !

ஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும் தங்கம் !


👉 நாம் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவார்கள்.

👉 ஆனால், இங்கு ஒரு கோவிலில் பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இது கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?


👉 தீபாவளி அன்று ரத்லத்தில் உள்ள மஹலட்சுமி கோயில் ரூ .100 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்படும்.

👉 மத்தியப்பிரதேச மாநிலத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயர்கொண்ட இந்த ஊர் தங்கத்திற்கு பெயர்பெற்றது.

👉 இங்குள்ள மகாலஷ்மி கோவிலில் தங்கம் பரிசாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

👉 பக்திக்காக மட்டுமல்லாது, எளியோர்களின் வறுமையினை நீக்குவதற்கு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருவோர் தாங்கள் செலுத்தும் காணிக்கையினை பணமாக செலுத்துவதில்லை.

👉 காணிக்கை செலுத்துபவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிகளாக காணிக்கையினை செலுத்துகின்றனர்.

👉 வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போன்று குவித்து வைக்கப்பட்டிருக்கும்.

👉 மற்ற கோவில்களில் சேரும் காணிக்கையை அந்தந்த கோவில்களின் திருப்பணிகளுக்காக செலவு செய்வார்கள்.

👉 ஆனால், இக்கோவிலில் சேர்ந்த காணிக்கையான தங்கம் மற்றும் வெள்ளியினை தீபாவளி நாளன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.



👉 இதுபோல் ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இந்த தங்க பிரசாதம் தினந்தோறும் வழங்கப்படுவதில்லை.

👉 இங்கு பிரசாதமாக தரப்படும் தங்கத்தை மக்கள் இறைவனின் அருளாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த தங்க பிரசாதத்தை யாரும் விற்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


100 கோடி பணம் மற்றும் தங்கம்  கொண்டு மஹாலக்ஷ்மியை அலங்காரம் செய்த காட்சி :




Comments

Popular posts from this blog

தானாகவே சுழலும் லிங்கம்

ஆண்மைக்குறைபடுகள், பெண்களின் குறைபாடுகள்,குழந்தையின்மை சரிசெய்யும் அற்புதமான சித்த மூலிகைகள்

பாரம்பரிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்