ஆணுக்காக பெண் கட்டிய தாஜ்மஹால்!
👸👸👸ஷாஜகனுக்கு முன்பே தன் கணவருக்காக தாஜ்மஹாலை விட மிக பிரமாண்டமான நினைவு சின்னத்தை எழுப்பிய பெண் (உதயமதி).👸👸👸
இராணியின் படிக்கிணற்றின் வரலாறு:
இராணியின் படிக்கிணறு (the Queen’s Stepwell) (இராணி கி வாவ், Rani ki vav) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பதான் மாவட்டத் தலைமையகமான
பதான் நகரத்தில் அமைந்துள்ள ஒரு படிக்கிணறு ஆகும்.
நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக 22 சூன் 2014 அன்று யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு இராணியின் கிணறு பெயராயிற்று.

1050-இல் சோலாங்கி குல அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான முதலாம் பீமதேவனின் (1022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன் முதலாம் கர்ணதேவனும் இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்டர் ஆழமும் கொண்டது. இது ஏழு அடுக்குகளாகக் கட்டப்பட்டுள்ளது.
கடைசிப் படிக்கட்டுக்குக் கீழே பல கி.மீ நீளமுள்ள சுரங்கப் பாதை சித்பூருக்குச் செல்கிறது. போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் தப்பிச் செல்வதற்காக இச்சுரங்கப்பாதைக் கட்டப்பட்டிருக்கிறது. 1304இல் வாழ்ந்த சமண சமயத் துறவி மெருங்க சூரி என்பவர் எழுதிய பிரபந்த சிந்தாமணி என்ற நூலில் ராணி உதயமதி நிறுவிய இந்த படிக் கிணற்றைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

காலப் போக்கில் இந்த அழகிய கிணறு கற்களாலும் மணலாலும் மூடப்பட்டுவிட்டது.
இதனால் காலப்போக்கில் இந்தக் கிணற்றை பற்றித் தெரியாமலே போய்விட்டது. 1960 ஆம் ஆண்டு தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது.
Comments
Post a Comment