நிலாவை காட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவத்தில் உள்ள அறிவியல் உண்மை
👶👶நம் முன்னோர்கள் ஏன் குழந்தைகளுக்கு நிலாவை காட்டி உணவு ஊட்டினார்கள் என்று தெரியுமா !👶👶
நிலவை காட்டி சோறு ஊட்டும் போது,
குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது
தொண்டைக்குழல், உணவுக்குழல்
விரிகிறது. உணவு இலகுவாக உள்ளே
இறங்கும் சின்ன உணவு குழலில்
கொஞ்சம் கொஞ்சமாக இறங்கும்.
குழந்தை கருவில் உருவாகும் போது
தாயின் தொப்புள் கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது.
தொப்புள் கொடி உடலில் இருந்து
பிரிந்த பின்பு தான் உணவு குழலின் விட்டம் விரிய தொடங்குகிறது
இது முழுமையடைய ஐந்து வருடம்
ஆகிறது.
ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு
உணவை அவசர அவசரமாக திணிப்பது
உடல் வளர்ச்சிக்கான காலஅவகாசத்தை மறுப்பதும் குழந்தைகள் மீது நாம் செலுத்தும் ஒரு வித மறைமுக
வன்முறையே ஆகும்.
குழந்தை பிறப்பிலிருந்து பால்குடி
மறக்கும் ஐந்து வயது வரை தாயானவள்
குழந்தையின் பொருட்டும் குழந்தைக்கு
சுரக்க வேண்டிய பாலின் பொருட்டும்
கவனமாக உண்ண வேண்டியது ஒரு
தாய்மைக்கு மிகவும் மரியாதையளிக்கும்
நிலவை காட்டி சோறு ஊட்டுவது
பண்பாடு மட்டுமல்ல அறம் சார்ந்த
அறிவியலும்தான்.
Aaha
ReplyDelete