ஸ்கேன் இல்லாத காலத்திலேயே கருவில் வளரும் குழந்தைந்தயை செதுக்கிய நம் சிற்பியின் திறமையை பார்ப்போமா
ஸ்கேன் இல்லாத கற் காலத்திலேயே கருவில் வளரும் சிசுவை எந்தெந்த கோணங்களில் வளரும் என்று அக்கால கோவில் தூண்களில் வடித்த நம் தமிழரின் சிற்ப கலையின் நுணுக்கத்தை பற்றி அறிய ஓரு நல்ல வாய்ப்பு
கோவிலின் பெயர்:
கால பைரவ வடுகநாத சுவாமி கோவில்.
கோவிலின் சிறப்பு:
காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள்; காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள்' என்று குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார்.
பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீகாலபைரவர்தான்.
புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர்- அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது, அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.
ஆகவே வசதி இல்லாத அன்பர்கள்,நம் தமிழகத்திலேயே உள்ளே குண்டடம் சென்று அங்குள்ள பைரவரை தரிசித்து பலன் பெறுங்கள் என்றார் வாரியார் ஸ்வாமிகள்.
Comments
Post a Comment