Posts

Showing posts from November, 2019

நிலாவை காட்டி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவத்தில் உள்ள அறிவியல் உண்மை

Image
👶👶நம் முன்னோர்கள் ஏன் குழந்தைகளுக்கு நிலாவை காட்டி உணவு ஊட்டினார்கள் என்று தெரியுமா !👶👶 நிலவை காட்டி சோறு ஊட்டும்‌ போது, குழந்தை மேல்நோக்கி பார்க்கும்போது தொண்டைக்குழல்‌, உணவுக்குழல்‌ விரிகிறது. உணவு இலகுவாக உள்ளே இறங்கும்‌ சின்ன உணவு குழலில்‌ கொஞ்சம்‌ கொஞ்சமாக இறங்கும்‌. குழந்தை கருவில்‌ உருவாகும்‌ போது தாயின்‌ தொப்புள்‌ கொடி வழியாக குழந்தைக்கு உணவு செல்கிறது. தொப்புள்‌ கொடி உடலில்‌ இருந்து பிரிந்த பின்பு தான்‌ உணவு குழலின்‌ விட்டம்‌ விரிய தொடங்குகிறது இது முழுமையடைய ஐந்து வருடம்‌ ஆகிறது. ஐந்து வயது வரை குழந்தைகளுக்கு உணவை அவசர அவசரமாக திணிப்பது உடல்‌ வளர்ச்சிக்கான காலஅவகாசத்தை மறுப்பதும்‌ குழந்தைகள்‌ மீது நாம்‌ செலுத்தும்‌ ஒரு வித மறைமுக வன்முறையே ஆகும்‌. குழந்தை பிறப்பிலிருந்து பால்குடி மறக்கும்‌ ஐந்து வயது வரை தாயானவள்‌ குழந்தையின்‌ பொருட்டும்‌ குழந்தைக்கு சுரக்க வேண்டிய பாலின்‌ பொருட்டும்‌ கவனமாக உண்ண வேண்டியது ஒரு தாய்மைக்கு மிகவும்‌ மரியாதையளிக்கும்‌ நிலவை காட்டி சோறு ஊட்டுவது பண்பாடு மட்டுமல்ல அறம்‌ சார்ந்த ...

ஆணுக்காக பெண் கட்டிய தாஜ்மஹால்!

Image
👸👸👸ஷாஜகனுக்கு முன்பே தன் கணவருக்காக தாஜ்மஹாலை விட மிக பிரமாண்டமான நினைவு சின்னத்தை எழுப்பிய பெண் (உதயமதி).👸👸👸 இராணியின் படிக்கிணற்றின்  வரலாறு: இராணியின் படிக்கிணறு  (the Queen’s Stepwell) ( இராணி கி வாவ் ,  Rani ki vav )  இந்தியாவின்   குஜராத்  மாநிலத்தில்  பதான்  மாவட்டத்  தலைமையகமான  பதான்  நகரத்தில் அமைந்துள்ள ஒரு  படிக்கிணறு  ஆகும்.  நூற்றுக்கணக்கான படிகளுடன் கூடிய அழகிய இக்கிணற்றை  இந்தியாவில் உள்ள உலக பாரம்பரியக் களங்களின் ஒன்றாக  22 சூன் 2014 அன்று  யுனெஸ்கோ  அறிவித்துள்ளது. இராணி உதயமதி நிறுவியதால் இக்கிணற்றுக்கு  இராணியின் கிணறு  பெயராயிற்று. 1050-இல்  சோலாங்கி குல  அரசை நிறுவியவரும், மன்னன் மூலராஜனின் மகனுமான  முதலாம் பீமதேவனின்  (1022–1063) நினைவாக, அவரின் மனைவியும் பட்டத்து ராணியுமான உதயமதியும், மகன்  முதலாம் கர்ணதேவனும்  இணைந்து இக்கிணற்றை நிர்மாணித்தனர். இந்தக் கிணறு 64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் 27 மீட்...

ஸ்கேன் இல்லாத காலத்திலேயே கருவில் வளரும் குழந்தைந்தயை செதுக்கிய நம் சிற்பியின் திறமையை பார்ப்போமா

Image
ஸ்கேன் இல்லாத கற் காலத்திலேயே கருவில் வளரும் சிசுவை எந்தெந்த கோணங்களில் வளரும் என்று அக்கால கோவில் தூண்களில் வடித்த நம் தமிழரின் சிற்ப கலையின் நுணுக்கத்தை பற்றி அறிய ஓரு நல்ல வாய்ப்பு  கோவிலின் பெயர்: கால பைரவ வடுகநாத சுவாமி கோவில். கோவிலின் சிறப்பு: காசு இருந்தால் காசிக்குச் செல்லுங்கள்; காசு இல்லை என்றால் குண்டடத்துக்கு வாருங்கள்' என்று குண்டடம் ஸ்ரீகாலபைரவ வடுகநாதரின் சிறப்பைப் பற்றி கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொல்வார்.  பைரவர் என்றால் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது காசி மாநகரின் காவல் தெய்வமான ஸ்ரீகாலபைரவர்தான்.  புராணச் சிறப்பு வாய்ந்த காசி மாநகரை, எந்த வித தீய சக்திகளும் அண்ட விடாமல் காவல் காத்து வருபவர்- அங்கே குடி கொண்டுள்ள ஸ்ரீகாலபைரவர். காசிக்குச் செல்லும் பக்தர்கள் திரும்பும்போது, அவரைத் தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தி பெறும் என்று புராணம் சொல்கிறது.  ஆகவே வசதி இல்லாத அன்பர்கள்,நம் தமிழகத்திலேயே உள்ளே குண்டடம் சென்று அங்குள்ள பைரவரை தரிசித்து பலன் பெறுங்கள் என்றார் வாரியார் ஸ்வாமிகள்.  கோவில் சிற்பங்க...

ஆண்மைக்குறைபடுகள், பெண்களின் குறைபாடுகள்,குழந்தையின்மை சரிசெய்யும் அற்புதமான சித்த மூலிகைகள்

Image
விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையை உயர்த்த: திருமூலர் பாடல் : "காலை இஞ்சி கடும்பகல் சுக்கு மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்  விருத்தனும் பாலனாமே" கருத்து: காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர கிழவனும் குமரனாகலாம். என்பதே இப்பாடலின் கருத்தாகும். வெள்ளை முசிலி: வெள்ளை முசிலியை உட்கொள்வது, ஆண்களுக்கு ஏற்படும் விறைப்புத்தன்மை குறைபாடுக்கான சிகிச்சையில் மிகவும் சக்தி வாய்ந்தது என அறியப்பட்டு இருக்கிறது. ஆயுர்வேதத்தின் படி, இது விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு நன்மை விளைவிப்பது மட்டும் அல்லாமல், கூடவே, நீண்ட நேரத்துக்கு விறைப்புத்தன்மை குறையாமல் பராமரிக்கவும் உதவுகிறது என அறியப்படுகிறது. விந்து முந்துதல் மற்றும் விரைப்பு தன்மையை அதிகரிக்க: விரைப்பு தன்மையை அதிகரிக்கும் மூலிகை: அஸ்வகந்தா மூலிகை: விந்தணுக்களின் ஓட்டத்தை துரித படுத்தி காமத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுவதற்கு இந்த அஸ்வகந்தா மூலிகை உதவுகிறது. இதை வயகரா மாத்திரை தயாரிக்கவும் பயன்படுத்...

பல்லாங்குழி விளையாட்டும் அதன் அறிவியல் உண்மைகளும்

Image
நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்:  PART-2 பல்லாங்குழி: கிராமங்களில் நாம் மறந்தவை !! 🤑 நம்மிடம் இன்னும் கொஞ்சம் உயிருடன் இருக்கும் விளையாட்டுக்களுள் ஒன்றான பல்லாங்குழி ஆட்டத்தைப் பற்றி இங்கு காண்போம். 🤑 பல்லாங்குழி என்பது மரம் அல்லது உலோகத்தாலான ஒரு விளையாட்டுச் சாதனம். அதில் இரு வரிசைகளில் ஏழு குழிகள் இருக்கும். தேவையானவை :  🤑  கற்கள், புளியங்கொட்டை ஆடுபவர்களின் எண்ணிக்கை : 🤑  இரண்டு பேர் எப்படி விளையாடுவது? 🤑  பல்லாங்குழி சட்டத்தில் ஏழு குழிகள் இருக்கும். அவற்றுள் புளியங்கொட்டைகளை (அ) கற்களை 5, 5 ஆகப் போட்டு வைக்க வேண்டும். 🤑 ஒரு குழியில் இருப்பதை எடுத்து ஒவ்வொன்றாக அடுத்த அடுத்த குழிகளுள் போட வேண்டும். முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ளதை எடுத்து அப்படியே போட்டு வர வேண்டும். முடிந்தவுடன் ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருப்பதை தனக்குரியதாக்க வேண்டும். 🤑 ஒரு குழியில் நான்கு கொட்டைகள் இருந்தால் அதையும் 'பசு" எனச் சொல்லி தனதாக்க வேண்டும். ஆட்ட இறுதியில் ...

பாரம்பரிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்

Image
நம் முன்னோர்கள் விளையாடிய விளையாட்டும் அதன் அறிவியல் உண்மையும்: பாண்டியாட்டம்: வேறு பெயர்கள்: நொண்டி, சில்லு பாண்டி, சில்லு கோடு, எட்டுக்கட்டி விளையாடுதல்.   சில்லு விளையாட்டு..!  🏌 குழந்தைகள் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக பார்க்காமல், அவர்களின் உடலுக்கு நன்மை தருகிறது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். எத்தனை பேர் விளையாடலாம்? 🏌 பல பேர் எப்படி விளையாடுவது? 🏌முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு மைதானத்தில் குச்சியால் எட்டு கட்டங்களை போட்டுக்கொள்ள வேண்டும். 🏌பின்பு இந்த கட்டத்திலிருந்து சுமார் 10 அடி தொலைவில் உத்திக் கோடுகளை வரைந்துக் கொள்ள வேண்டும். சில்லு கல்: 🏌பிறகு முதலாவதாக விளையாடும் நபர் உத்திக்கோட்டிலிருந்து முதலாவது கட்டத்தில் சில்லை எறிய வேண்டும். இவ்வாறு எறியும்பொழுது சில்லு கோட்டில் படாமல் இருக்க வேண்டும். அவ்வாறு பட்டுவிட்டால் அடுத்த நபர் விளையாட்டை தொடங்க வேண்டும். 🏌சில்லை எறிந்த பின்பு முதல் போட்டியாளர் உத்திக்கோட்டிலிருந்து முதலாவது இருக்கும் கட்டத்திற்கு நொண்டி அடித்து வர வேண்டும். 🏌பின்பு முதலாவது கட்டத்தில் இ...

தானாகவே சுழலும் லிங்கம்

Image
சுழலும் லிங்கம்மா ! சுழலும் லிங்கம் உருவான வரலாறு: ஒருசமயம் அவ்வையார், சிவபெருமானைத் தரிசிக்க கயிலாயம் சென்றார். நீண்டதூரம் நடந்து வந்ததால், களைப்பில் ஓரிடத்தில் அமர்ந்தார். அப்போது சிவன் இருந்த திசையை நோக்கி காலை நீட்டினார். இதைக்கண்ட பார்வதி தேவிக்கு கோபம் வந்துவிட்டது. அவர், ‘அவ்வையே! உலகாளும் என் தலைவனாகிய சிவபெருமான் அமர்ந்திருக்கும் இடத்தை பார்த்து, காலை நீட்டி உட்கார்ந்திருக்கிறீர்களே! இது அவரை அவமரியாதை செய்வது போல் உள்ளது. எனவே, காலை வேறு பக்கமாக நீட்டிக்கொண்டு அமருங்கள்’ என்றாள். இதைக்கேட்ட அவ்வை சிரித்தார். பின்னர், ‘தாயே! என்ன சொல்கிறீர்கள்? சிவன் இல்லாத இடம் பார்த்து கால் நீட்டுவதா? அப்படியொரு இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அந்த திசையை நீங்களே சொல்லுங்கள். அந்த திசை நோக்கியே என்னுடைய காலை நீட்டிக்கொள்கிறேன்’ என்றார். மதுரை சுழலும் லிங்கம்: செங்காட்டங்குடி சுழலும் லிங்கம்: வெற்றி மலையில் சுழலும் லிங்கம்: கபாலீஸ்வரர் சுழலும் லிங்கம்: திருவண்ணாமலை சுழலும் லிங்கம்: திருநள்ளாறு சுழலும் லிங்கம்: அப்போதுத...

இளமை மாறாமல் இருக்க செய்யும் ப்ளூ டீ (blue tea)

Image
BLUE TEA (ப்ளூ டீ) !!! தற்போது க்ரீன் டீயை போலவே ‘ப்ளூ டீ’ என்ற ஒன்று அறிமுகமாகியுள்ளது.  இது உடலில் உள்ள அதிகபடியாக நச்சுக்களை நீக்கி, கல்லீரலுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. இதனால் அஜீரண கோளாறுகள் குணமடைவதாக கூறப்படுகிறது. ப்ளூ டீயில் உள்ள ஆண்டி-க்ளைகேஷன், சருமத்தை மென்மையாக்கி, வயது முதிர்வை கட்டுப்படுத்துகிறது. ப்ளூ டீ குடிப்பதனால் உச்சந்தலையில் ரத்த ஒட்டத்தை அதிகரிக்கச் செய்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், இந்த ப்ளூ டீ நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. ப்ளூ டீ குடிப்பதனால், நீரிழிவு பிரச்னைகள் குறைந்து, அதன் காரணமாக ஏற்படும் இதய கோளாறுகளை சரி செய்கிறது. புற்றுநோயின் வீரியத்தை குறைக்கவும் ப்ளூ டீ பயன்படுகிறது. செய்முறை :  * 1 கப் தண்ணீர்  * 1/2 கப் தேன்/நாட்டு சர்க்கரை/சர்க்கரை   * 1/4 கப் எலுமிச்சை சாறு (1 எலுமிச்சை) ☕ ஒரு நீண்ட கை கொண்ட உலோக கலம் ஒன்றில் சங்கு பூ மற்றும் தண்ணீரை சேர்த்து ஒரு கொதிக்க வைக்க வேண்டும்.   ☕ அதை சுமார் 3 நிமிடங்கள் வரை வேகவைக்க வேண்டும். ...

காவியங்கள் படைத்த வில்லன்களுக்கும் கோவில்கள்!

Image
சகுனி,ராவணன்,கர்ணன்,காந்தாரி,துரியோதனன் மற்றும் பீஷ்மர் ஆகியோருக்கும் கோவில்கள் இருக்கின்றன. சகுனி கோவில் : சகுனியின் கோவில் கேரளாவின் பவித்ரேஸ்வரத்தில் உள்ளது அநேகமாக நம் நாட்டில் இதுவே இவருக்காக கட்டப்பட்டு உள்ள ஒரே ஒரு கோயிலாகும். இந்த பழங்கால கோயிலுக்குள் ஒரு கலை கிரானைட் சிம்மாசனம் , சகுனியின் புனித இருக்கையாக கருதப்படுகிறது. கோயிலைச் சுற்றியுள்ள புராணக்கதை- மகாபாரதப் போரின்போது, ​​சகுனி தனது மருமகன்களான கெளரவர்களுடன் நாடு முழுவதும் சுற்றித் திரிந்தாராம்.  பிறகு சகுனி இந்த இடத்திற்குத் திரும்பியவுடன் சிவபெருமானின் ஆசீர்வாதத்துடன் ‘மோக்ஷத்தை’ அடைந்து பின்னர் சகுனி பகவான் ஆனார். Watch this link see this temple structure : https://youtu.be/B0BM-jBw2v0 இராவணன் கோவில் : பெரும்பாலான இந்துக்கள் ராவணனின் பொம்மைக்கு தீ வைத்து தசரா பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.   ஆந்திராவில் உள்ள இந்த ராவணன் கோவிலை பத்து தலை பிசாசு மன்னர் என்ற பெயரில் இப்பகுதி மக்கள்  வழிபடுகிறார்கள்.  சீதாவைக் கடத்தி, தேவர்களுக்கு எதிராக செயல்பட்டதை தவிர, அவர் ஒர...
Image
கோவில் பிரசாதமாக வழங்கப்படும் தங்கம் ! ஆச்சர்யப்படுத்தும் கோவில்... பிரசாதமாக வழங்கப்படும் தங்கம் ! 👉 நாம் கோவிலுக்கு சென்றால் பிரசாதமாக திருநீறு, குங்குமம், பூ, பழம், பொங்கல் போன்றவற்றை பிரசாதமாக வழங்குவார்கள். 👉 ஆனால், இங்கு ஒரு கோவிலில் பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இது கேட்பதற்கே ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா? 👉 தீபாவளி அன்று ரத்லத்தில் உள்ள மஹலட்சுமி கோயில் ரூ .100 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளால் அலங்கரிக்கப்படும். 👉 மத்தியப்பிரதேச மாநிலத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயர்கொண்ட இந்த ஊர் தங்கத்திற்கு பெயர்பெற்றது. 👉 இங்குள்ள மகாலஷ்மி கோவிலில் தங்கம் பரிசாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். 👉 பக்திக்காக மட்டுமல்லாது, எளியோர்களின் வறுமையினை நீக்குவதற்கு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருவோர் தாங்கள் செலுத்தும் காணிக்கையினை பணமாக செலுத்துவதில்லை. 👉 காணிக்கை செலுத்துபவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிகளாக காணிக்கையினை செலுத்துகின்றனர். 👉 வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ள...